×

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் லைப் விழிப்புணர்வு

தாம்பரம்: ஒன்றிய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் எஸ்பிஐ வங்கி சார்பில், டிஜிட்டல் லைப் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி, மேற்கு தாம்பரத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் உயிர்ப்பு சான்றிதழ் அப் பதிவிறக்கம் செய்ய உதவியதுடன், மத்திய அரசின், டோர் ஸ்டெப் பேங்கிங் (வீடு தேடி வங்கி) செயலியை பற்றிய விளக்கமும், பயன்பாடுகளையும் எடுத்துரைத்ததோடு அவர்களுக்கு இணையம் மூலம் ஆயுள் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், ஆதார் அட்டையில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் உள்ளிட்டவையை செய்ய தனியாக முகமும் அமைக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து, எஸ்பிஐ வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில்: ஓய்வு ஊழியர்கள் தங்களது ஆயுள் சான்றிதழ் வழங்க தங்களது வங்கியையோ அல்லது பொது இசேவை மையங்களையோ நாட வேண்டிய நிர்பந்தம் இருந்து வந்தது. மத்திய அரசு தற்போது அறிமுகபடுத்தியுள்ள ‘‘ஆதார் பேஸ் ரீட் அப்’’ மூலம் ஓய்வு ஊதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே தங்களது ஆயுள் உயிர்ப்பு சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த, செயலியை பதிவிறக்கம் செய்தபின் https://jeevanpramaan.gov.in/package/download என்ற இணையதளத்திலிருந்து ஜீவன் பிரம்மன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் ஓய்வு ஊதியர்கள் தங்களது விபரங்களை பதிவுசெய்தால் அவர்களின் மின்னஞ்சலுக்கு ஒரு குறியீடு எண் அனுப்பப்படும் அக் குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து சமர்ப்பித்தபின் அலைபேசி திரையில் ஓய்வு ஊதியர்களின் விபரங்கள் வரும், அதை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், அலைபேசி கேமராவில் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்க உயிர்ப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கபட்டு அதற்கான உறுதி செய்யப்பட்ட குறுஞ்செய்தி தகவல் அலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், ஒன்றிய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை துணை  இயக்குனர் மஞ்சுகுப்தா, தலைமை ஆலோசகர் ரமன்ஜித் கௌர், எஸ்பிஐ மண்டல மேலாளர்  அஸ்வத் துரை செல்வம், எஸ்பிஐ உதவி பொது மேலாளர்கள் ஷிரான்சு, சரவணன் மற்றும் சென்னை மற்றும் அதன் புறநகர்  பகுதிகள் என பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள்  கலந்து கொண்டனர்….

The post ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் லைப் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Union Government's Retirement Employees Welfare Department ,SBI Bank ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...