×

தனியார் பள்ளி பேருந்து மாநகர பேருந்து மோதல்

வேளச்சேரி: சேலையூரில் உள்ள   தனியார் பள்ளி பேருந்து ஊழியர் மாம்பாக்கம் சாலையில், சித்தாலபாக்கம் பஸ் நிறுத்தத்தில் நேற்று மாணவர்களை இறக்கிக் கொண்டு இருந்தார். அப்போது   தி.நகரில்  இருந்து  சித்தாலபாக்கம்  வழியாக கொளப்பாக்கம்   செல்லும் மாநகர  பேருந்து (தடம் எண்: எம்51 வி),  எதிர்பாராத விதமாக, பள்ளி பேருந்தின் பின்பக்கம் வேகமாக மோதியது. இதில், எம்டிசி  டிரைவர் காசிநாதன் (43) படுகாயமடைந்தார். 7 மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காசிநாதனை மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post தனியார் பள்ளி பேருந்து மாநகர பேருந்து மோதல் appeared first on Dinakaran.

Tags : Salayur ,Siddalapakam ,Mambakkam Road ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு