×

கணேசுக்கு மாதுரி தீட்சித் பரிசு

பாலிவுட்டில் தான் அறிமுகமாகும் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற படத்தின் டிரைலரை பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் வெளியிட்டது குறித்து கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில், ‘எனக்குள் மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்கிய நடிகை மாதுரி தீட்சித், என் முதல் இந்தி படத்தின் டிரைலரை வெளியிட்டதை பெரிய பரிசாக நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

இதில் கரண் நாத், நத்தாலியா கவுர், வினோத் கன்னா நடித்துள்ளனர். சேகர் சூரி இயக்கியுள்ளார். வரும் 28ம் தேதி படம் ரிலீசாகிறது. தமிழில் நடிகர் யூகி சேது இயக்கும் படத்தில் நடிக்கிறேன். லண்டனில் படமாக்கப்பட்ட திரில்லர் கதை இது. மேலும், தெலுங்கில் தாடி என்ற படத்தில் நடிகராகவே நான் நடிக்க, பத்திரிகையாளராக ஸ்ரீகாந்த் நடிக்கிறார்’ என்றார்.

Tags : Madhuri Dixit ,Ganesh ,
× RELATED பரிசுப் பொருள்...