×

பாதுகாப்பு வாகனம் கோரி மீனவர்கள் விழிப்புணர்வு பேரணி

திருவொற்றியூர்: எண்ணூர், தாழங்குப்பம் கடற்கரையில் பாதுகாப்பு  வாகனம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மீனவர்கள்  கையில் ஜோதி ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையில் இருந்து பாரதியார் நகர் உள்ள கடலில் இனிவரும் காலங்களில் எந்த ஒரு நபரும் கடலில் குளித்து உயிரிழப்பதை தடுக்க, தாழங்குப்பம் கடற்கரை பகுதியில் எப்போதும் தீயணைப்பு துறை சார்பில், பாதுகாப்பு வாகனம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்கள் கையில் ஜோதி ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். மீனவ கிராம நிர்வாகிகள் ரோஸ் வெங்கடேசன், சுதாகர் ஆகியோர் முன்னிலையில் தாழங்குப்பம் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி மேளதாளம் முழங்க சிலம்பாட்டத்துடன் விழிப்புணர்வு ஜோதி ஏந்தி பிரசாரமாக சென்றனர். பின்னர், கத்திவாக்கம் பஜார் தெருவில் மேடை அமைத்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிங்காரவேலர் படத்திற்கு திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், திமுக பகுதி செயலாளர் அருள்தாசன் மலர்தூவி மரியாதை செலுத்தி, நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இப்பேரணியில், முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.குப்பன், கவுன்சிலர்கள் கே.கார்த்திக், கோமதி, தமிழ் நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் உள்பட  மீனவர் சங்கம், கிராம நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்….

The post பாதுகாப்பு வாகனம் கோரி மீனவர்கள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Awareness ,for fishermen ,Niloor, Lalangapam ,Safety Vehicle Awareness Rally for Fishermen demanding ,
× RELATED அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன்...