×

சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 36 பேர் உயிரிழப்பு; இருவரை தேடும் பணி தீவிரம்..!

பெய்ஜிங்: சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்தில் மாயமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் இருக்கும் ஹன்யாங் மாகாணத்தில் பல தொழிற்சாலைகள் உள்ளன. அங்குள்ள ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏராளமான ரசாயனப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அப்போது தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 63  வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இருவர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சிலரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவு படுத்தப்படவில்லை. ஆனால் முறையான அனுமதியில்லாமல் ஆபத்தான ரசாயனப் பொருட்கள் இருப்பு மைவக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது….

The post சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 36 பேர் உயிரிழப்பு; இருவரை தேடும் பணி தீவிரம்..! appeared first on Dinakaran.

Tags : China Chemical Factory Fire ,Beijing ,China ,Henan province ,Dinakaran ,
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...