பட வாய்ப்புகள் அமையாததால் நடிகை சுபர்னா ஜாஷ் தற்கொலை

மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான வங்க மொழிப்படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சுபர்னா ஜாஷ் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளம் நடிகையான சுபர்ணா ஜாஸின் மரணம் பெங்காலி திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: