×

பறக்கும் விமானத்தில் ஆடியோ ரிலீஸ்

நடிகர் சூர்யா நடிக்கும் படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸை புதுமையாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். நாளை 13ம் தேதி காலை மாணவ, மாணவி களுடன் மீனம் பாக்கம் விமான நிலையத்துக்கு சூர்யாவுடன் வரும் படக் குழு அங்கிருக்கும் விமானத்தில் ஏறி பறந்து வங்காள விரிகுடா கடல் மீது ஒரு வட்டம் அடிக்கிறது. வானில் பறந்தபடியே படத்தின் பாடல் வெளியிடப்படுகிறது. இதற்காக விமானம் ஒன்றை சூர்யா வாடகைக்கு எடுத்திருக்கிறார். விமானத்தில் பறக்க உள்ள மாணவ, மாணவிகளுக்கு இதுதான் முதன்முறை விமான பயணமாம்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!