×

பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பான இணையதளம் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு -கலெக்டர் துவக்கி வைத்தார்

ஊட்டி : நீலகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய ‘தீவிர விழிப்புணர்வு மாதம் 2022”ஐ முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை  கலெக்டர் துவக்கி வைத்தார். ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வங்கிகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும் வகையில், நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாதம் 2022 என்ற நிகழ்ச்சியினை துவக்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கியது. கலெக்டர் அம்ரித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியானது ஊட்டி ஏடிசி., அரசு தாவரவியல் பூங்காவிலும் நடைபெறும். இந்நிகழ்ச்சியின் போது, பொதுமக்களிடையே வாடிக்கையாளர்களின் பொறுப்பு, அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 22ம் தேதி (இன்று) குன்னூர் மற்றும் கோத்தகிரி பேருந்து நிலையங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் ப்ரௌசர், வெப்சைட், ஹேப்ஸ் குறித்தும், சோதித்தறியப்பட்ட நம்பகமான உலாவி, பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய இணையதளங்களை பயன்படுத்தல், பணம் செலுத்தும் செயலிகளை அவ்வப்போது புதுப்பித்து வைத்தல் மற்றும் தெரிந்த பயனாளிகளுக்கு மட்டுமே பணமாற்றம் செய்தல்,  UPI மூலம் பணம் செலுத்தும் போது பெறுபவரின் கோரிக்கை தவகல்களை சரிபார்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், கடன், பற்று அட்டை பயன்படுத்தும் போது அட்டை மீது கவனம் செலுத்துதல், பரிவர்த்தனைக்கு பிறகு வரும் குறுஞ்செய்தியில் உள்ள பரிவர்த்தனை தொகை சரியாக உள்ளதா, ரசீதுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுதல் போன்ற செய்யக் கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவை  குறித்த விளக்கம், பொது இடங்களில் சாதனங்களை உபயோகித்து பரிவர்த்தனை செய்தல், பாதுகாப்பற்ற திறந்த வலைதள வசதிகளை உபயோகித்து பரிவர்தனை செய்தல், பின், ஓடிபி, கடவு சொல் ஆகியவற்றினை பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இது தவிர முக்கிய தகவல்களை கைபேசியில் வைத்திருத்தல், அட்டை மற்றும் அட்டை குறித்த தகவல்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை குறித்தும், வங்கியின் வாடிக்கையாளர்களின் உரிமை, தவறுதலாக பணம் செலுத்தப்பட்டு இருந்தால் அதனை மீட்பது போன்றவற்றை குறித்தும், இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கரூர் வைஸ்யா வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, கரூர் வைஸ்யா வங்கி கிளை மேலாளர் ரவிக்குமார் மற்றும் வங்கியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பான இணையதளம் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு -கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Reserve Bank of India ,Nilgiri Collector ,
× RELATED ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித்...