×

லீக் ஆன ‘இந்தியன் 2’ கமல் குதிரை சவாரி: காஜல் அகர்வால் திருமணம் மீண்டும் தள்ளிப்போகிறது

நடிகை காஜல் அகர்வால் கடந்த 14 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் நடித்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காஜலுக்கு பட வாய்ப்புகள் குறைந்திருக்கிறது. ஆனாலும் விடாப்பிடியாக தேடி வரும் படங்களை ஏற்று நடித்து வருகிறார். தமிழில் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் நடித்துள்ள, ‘பாரிஸ் பாரிஸ்’ படம் திரைக்கு வராமல் முடங்கிக்கிடக்கிறது.

இந்தியன் 2 படத்தை பெரிய அளவில் காஜல் நம்பியிருந்தாலும் அப்படம் முடிந்து திரைக்கு வர ஒரு வருடம் அவர் காத்திருக்க வேண்டி உள்ளது. இப்படத்தில் 80 வயது முதியவராக கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது சிஷியை யாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதற்காக அவர் மார்ஷல் ஆர்ட் சண்டை பயிற்சி பெற்றார். கடந்த ஆண்டே இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியிருந்தார் காஜல். ஆனால் படப்பிடிப்பு தடைபட்டதால் அவரால் பங்கேற்க முடியவில்லை. கமல்ஹாசனும் சில நாட்கள் நடித்துவிட்டு காலில் அறுவை சிகிச்சைக்காக 2 மாத காலம் ஓய்வு எடுத்தார். தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. காஜல் அகர்வால் படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார்.

இந்தியன் 2 பட ஷூட்டிங்கிலிருந்து காஜல் மேக் அப் அறையில் இருக்கும் புகைப் படத்தை நெட்டில் வெளியிட்டிருக்கிறார். ஆனால் அதில் முகத்தை காட்டவில்லை. ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் படம் வெளிவந்தால் தனது மார்க்கெட் மீண்டும் உயரக்கூடும் என்று காஜல் எண்ணியிருக்கிறாராம். கடந்த வருடமே காஜலின் திருமணம் பற்றி பேச்சு பரபரப்பாக அடிபட்டது. இந்தியன் 2 அடுத்த வருடம்தான் ரிலீஸ் என்பதால் இந்த வருடமும் காஜலின் திருமண பேச்சு.. பேச்சாகத்தான் இருக்கும் போலிருக்கிறது என்று ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.

Tags : Kajal Agarwal ,Kamal ,
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்