×

கொரோனா வைரஸால் ஐதராபாத்தில் மணி ஷூட்

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் பாங்காக்கில் படப்பிடிப்பு நடத்தவிருந்த நடிகர் நாகார் ஜூனாவின் வைல்டு டாக் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பீதியால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்து வந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா நடித்தனர். முதல்கட்ட படப் பிடிப்பு முடிந்துவந்த குழு மீண்டும் புறப்பட தயாரானபோதுதான் கொரோனா வைரஸ் பீதி படக்குழுவை நடுக்கத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து இதன் படப் பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவுக்கு மாற்றப்பட்டது. இதில் ஸ்டார் நட்சத்திரங்களுடன் வில்லன் நடிகர் ரியாஸ்கான் பங்கேற்கிறார்.

Tags : Hyderabad ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.