×

8 லட்ச ரூபாய் கடன் பிரச்னையில் கொசு மருந்து குடித்து, கை நரம்பை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற பெண் போலீஸ்; அமைந்தகரையில் பரபரப்பு

அண்ணாநகர்: அமைந்தகரையில் கொசு மருந்து குடித்துவிட்டு கை நரம்பை அறுத்துக்கொண்டு பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 லட்ச ரூபாய் கடன் பிரச்னைக்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டெல்லா(24). இவர் சென்னை ஆயுத படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவரின் கணவர் பாண்டியன்(28). இவர் கார் டிரைவர். தம்பதிக்கு 9 வயதில் மகன் உள்ளார். கணவரும் மகனும் விழுப்புரத்தில் உள்ள நிலையில், ஸ்டெல்லா சென்னை அமைந்தகரையில் வசித்துக்கொண்டு பணிக்கு சென்றுவந்துள்ளார். நேற்று மாலை ஸ்டெல்லா, தனது தாய் பானுமதியுடன் செல்போனில் பேசும்போது,’’தனக்கு 8 லட்ச ரூபாய் கடன் உள்ளது. அந்த பணத்தை என்னால் திரும்ப கட்ட முடியவில்லை. இதனால் மிகவும் மனஉளைச்சல் உள்ளது. என்ன செய்வதென்று தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். அதற்கு தாய், ‘’கவலைப்படாதே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளலாம். தைரியமாக இரு’’ என்று சமாதானப்படுத்தியுள்ளார். இதன்பிறகு கொஞ்சநேரம் கழித்து தாய் போன் செய்தபோது ஸ்டெல்லா போனை எடுக்கவில்லை. பலமுறை முயற்சி செய்தும் போனை எடுக்கவில்லை என்றதும் தாய் அதிர்ச்சி அடைந்தார். மீண்டும், மீண்டும் அழைத்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதையடுத்து பானுமதி, சென்னையில் உள்ள தனது கணவர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்து மகள் போனை எடுத்து பேசவில்லை. என்னவாயிற்று என்று தெரியவில்லை. உடனடியாக போய் பாருங்கள்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து நடராஜன் அமைந்தகரைக்கு சென்றபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது கை நரம்பை பிளேடால் கிழித்துகொண்டு ரத்தவெள்ளத்தில் ஸ்டெல்லா மயங்கிக் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்து கையில் 10 தையல்கள் போடப்பட்டது. இதன்பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.இதில், காவலர் ஸ்டெல்லா, கொசு மருந்து குடித்துவிட்டு பின்னர் தனது கை நரம்பை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்’’ தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது, ‘’தனக்கு 8 லட்ச ரூபாய் கடன் இருப்பதால் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன்’’ என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு செய்து கடன் பிரச்னையால்தான் தற்கொலைக்கு முயன்றாரா, வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா என்று விசாரணை நடத்துகின்றனர். கொசு மருந்து குடித்ததுடன் கை நரம்பை அறுத்துக் கொண்டு பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post 8 லட்ச ரூபாய் கடன் பிரச்னையில் கொசு மருந்து குடித்து, கை நரம்பை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற பெண் போலீஸ்; அமைந்தகரையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Annagar ,Kanthalam ,Laksa Rupees Dinakaran ,Dinakaran ,
× RELATED காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய...