×

‘தல’ காட்டும் தீபாவளி

தல அஜீத் நடித்த விஸ்வாசம் படம் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வந்து சக்கை போடு போட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரியாணி தயார் செய்துக்கொண்டிருக்கிறார் அஜீத். ஆம், தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வலிமை படத்தை வெளியிட எண்ணி உள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்கள் சென்டிமென்ட், கோர்ட் என்று வெவ்வேறு கதை அம்சங்களுடன் வந்த நிலையில் வலிமை படம் ஆக்‌ஷன் அதிரடி படமாக உருவாகி வருகிறது.

இதில் போலீஸ் அதிகாரி பைக் ரேஸராக அஜீத் நடிக்கிறார். அவர் பைக் ரேஸில் கலந்துகொண்டு சர்வதேச அளவில் பட்டம் வென்றவர் என்பதால் இப்படத்தில் அவரது பைக் ரேஸ் காட்சிகளுக்கு அதிமுக்கியத் துவம் தரப்பட்டிருக்கிறது.  இந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி தீபாவளி வருகிறது. அதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக அதாவது 12ம்தேதி வலிமை படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

Tags : Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...