விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன்: ஐஸ்வர்யா

பிரபல ஹீரோக்களுக்கு முன்னணி நடிகைகள் யாரும் தங்கையாக நடிக்க முன்வருவதில்லை. அஜீத் நடித்த வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க இளம் நடிகைகள் சிலரை அழைத்தபோது ஜோடியாக வேண்டுமானால் நடிக்கிறோம் தங்கையாக நடிக்க மாட்டோம் என்று ஓட்டம் பிடித்தனர். பிறகு பட வாய்ப்பில்லாமலிருந்த கும்கி நடிகை லட்சுமிமேனன் தங்கை வேடம் ஏற்று நடித்தார். இதையடுத்து அவரை மற்ற ஹீரோக்கள் படங்களிலும் தங்கையாகவே நடிக்க அழைத்தனர். இதில் ஷாக் ஆனார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அவருக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். இதையடுத்து வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபுவின் தங்கையாக நடித்தார். ஆனால் ஒரு நடிகருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என அவர் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’மற்ற ஹீரோக்களுக்கு தங்கையாக நடிப்பேன். ஆனால் விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன். அவருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை’ என்றார் ஐஸ்வர்யா.

Related Stories:

>