×

ஹீரோவாக மட்டுமே நடிக்க நினைத்து இருந்தால் இப்படி ஒரு மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தை மிஸ் பண்ணிருப்பேன்!.... விஜய் சேதுபதி

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் இறுதி கட்டமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைய உள்ளன.

காதலர் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் ஏதேனும் ஒரு அப்டேட் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. மாஸ்டர் படத்தின் முக்கிய அம்சமாக விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மாஸ்டர் படம் குறித்து பேசும் போது; தனக்கு ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்னும் இல்லை எனவும், கதாப்பாத்திரத்தின் வலிமை குறித்து தான் தொடர்ந்து நடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு இருந்தால் மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தை நான் தவறவிட்டு இருப்பேன்.

Tags : hero ,villain ,Vijay Sethupathi ,
× RELATED திருட்டு பாடம் விஜய் சேதுபதி வௌியிட்ட டீசர்