×

வெப் சீரிஸ் தயாரிப்பில் களமிறங்கும் உலக நாயகன்

சினிமாவின் நவீன தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகப்படுத்துகிறவர் கமல்ஹாசன் தான். "இன்னும் 10 ஆண்டுகளில் மக்கள் செல்போனில் படம் பார்ப்பார்கள்" என்று 10 ஆண்டுக்கு முன்பு சொன்னார். அன்று அதை பலரும் கிண்டல் செய்தார்கள். இன்று அவர் சொன்னது நடந்துள்ளது. சினிமாவின் அடுத்த வளர்ச்சியாக பார்க்கப்படும் வெப்சீரிஸ் பற்றி முதலில் பேசியதும் அவர் தான்.

இப்போது வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். ஹாஸ்டேஜஸ், ரோர் ஆப் தி லயன், நச் பலியே உள்ளிட்ட வெப் தொடர்களை தயாரித்துள்ள பனிஜே ஆசியா, டர்மரிக் மீடியா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மாநில மொழிகளில் வெப் சீரிஸ்கள் தயாரிப்பதாக அறிவித்திருக்கிறார். இதற்காக ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛எடுத்து வரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக பனிஜே ஆசியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி என பதிவிட்டுள்ளார்.

Tags : World Series ,
× RELATED வெப் சீரிஸ் தயாரிப்பில் களமிறங்கும் உலக நாயகன்