×

ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஜி.வி.பிரகாஷ்

நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ஹாலிவுட் படம், ட்ராப் சிட்டி. இவர்களுடன் டிராபிக் தண்டர், பர்சி ஜாக்சன், பிக் மொமா ஹவுஸ் போன்ற ஆங்கிலப் படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சன் மற்றும் டெட் பிரசிடென்ட்ஸ், நோர்பிட் போன்ற படங்களில் நடித்த கிளிப்டன், எரிகா பின்கெட் நடித்துள்ளனர்.

கைபா பிலிம்ஸ், நாசிக் ராவ்  மீடியா, கிங்டம் ஓவர் எவ்ரிதிங் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ரிக்கி பர்செல் எழுதி இயக்கியுள்ளார். இதில் நடித்தது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது: ஏழ்மையில் வாடும் ராப் பாடகன், வறுமை காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறான்.

அப்போது அவன் எழுதிய பாடல் உலகம் முழுக்க பிரபலமாகிறது. அப்போது அவன் கைது செய்யப்படுகிறான். என்றாலும், அவனுடைய புகழ் மேலும் பரவுகிறது. இந்நிலையில் அவனைக் கொல்ல சிலர் முயற்சிக்கின்றனர். அவனுக்கு ஆபரேஷன் செய்து எப்படி உதவுகிறேன் என்பது கதை. விரைவில் ஒரு ஹாலிவுட் படத்துக்கு இசை அமைக்கிறேன்.

Tags : GV Prakash ,Hollywood ,
× RELATED ஹாலிவுட்டை கதற விடும் கொரோனா வைரஸ்