×

தமிழ், தெலுங்கு மொழிகளை தொடர்ந்து கன்னடத்திலும் வெளியாகும் சூரரைப் போற்று

காப்பான் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வந்தது. தற்போது இந்த திரைப்படம் கன்னட மொழியிலும் வெளியிடப்படுகிறது. இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது இந்த படம் மூன்று மொழிகளில் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்திற்கு பிறகு தமிழ் நடிகருக்கு மூன்று மொழிகளில் வெளியாகும் படம் இதுவாகும்.

Tags : Surat ,
× RELATED தெலுங்கு நடிகர்கள் நிவாரண நிதி