×

முருகனாக அவதாரம் எடுக்கும் யோகி பாபு....ஆரம்பமே எதிர்ப்பு

விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வரும் படம் காக்டெய்ல். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் யோகி பாபு முருகன் போன்று வேடமிட்டு போஸ் கொடுத்துள்ளார்.

போஸ்டர் சிலருக்கு பிடித்துள்ளது, பலருக்கு பிடிக்கவில்லை. யோகி பாபுவை முருகன் கெட்டப்பில் பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, இந்து கடவுளை அவமதிக்க வேண்டாம். இந்த போஸ்டரை உடனே நீக்க வேண்டும். இல்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

உங்களின் இமேஜை டேமேஜ் செய்து கொள்ள வேண்டாம் யோகி பாபு. யோகிபாபு முருகன் வேடமிட்டது பலருக்கும் பிடிக்கவில்லை. ஒரு சிலரே போஸ்டர் அருமை, வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : Murugan ,Yogi Babu ,
× RELATED ஊரடங்கு உத்தரவு எதிரொலி: யோகி பாபு திருமண வரவேற்பு நடக்குமா?