×

கூடலூர் பழங்குடியின பெண்ணுக்கு ஹோம்மேட் சாக்லேட் உற்பத்தி யூனிட் அமைக்க ரூ.5.70 லட்சம் கடனுதவி-கலெக்டர் வழங்கினார்

ஊட்டி : கூடலூரை சேர்ந்த பழங்குடியின பெண்ணுக்கு ஹோம்மேட் சாக்லேட் உற்பத்தி யூனிட் அமைக்க 35 சதவீத மானியத்தில் ரூ.5.70 லட்சம் கடனுதவியை கலெக்டர் வழங்கினார். ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய துறை அலுவலர்களிடம் இருந்து விவரம் பெற்று தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 89 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசுகையில், ‘‘தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் செடிகளின் விவரங்கள் விலையுடன் கூடிய காட்சி பதாகைகள் வைக்க வேண்டும். பிஎம், கிசான் 13வது தவணை தொகை பெற இயலாத பயனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் கூடலூர் வட்டாரத்தில் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதுமலை மறு குடியமர்வு மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனியாக ஒரு கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை Nilgiris Tree Cutting Service என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து பெறலாம்’’ என்றார். இதையடுத்து, விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு டிடிஎஸ் குறித்து கூட்டம் நடத்தி விளக்கமளித்ததற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். முன்னதாக வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம் மூலம் கூடலூரை சேர்ந்த பழங்குடியின பெண் மஞ்சுளா என்பவருக்கு ரூ.5.70 லட்சம் (35 சதவீத மானியம்) ஹோம்மேட் சாக்லேட் உற்பத்தி செய்வதற்கான கடனுதவியை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இப்ராஹிம் ஷா மற்றும் விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள் மற்றும் பல்ேவறு அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post கூடலூர் பழங்குடியின பெண்ணுக்கு ஹோம்மேட் சாக்லேட் உற்பத்தி யூனிட் அமைக்க ரூ.5.70 லட்சம் கடனுதவி-கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kudalore ,Cuddalore ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...