கோப்ரா பட வில்லன் நீக்கம்

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லுவுட் நடிகர் ஷேன் நிகம் நடிக்கவிருந்தார். தற்போது திடீரென அவர் மாற்றப்பட்டிருக்கிறார். ஷேன் நிகம் மலையாளத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் மோதல்போக்கு கடைபிடித்து வருகிறார். 2 தயாரிப்பாளர்களின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அவர் மீது புகார் கூறப்பட்டது.

இதையடுத்து மலையாள தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அவர் 1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும். இல்லாவிட்டால் வேறு படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இப்பிரச்னை எப்போது முடியும் என்று தெரியாத சூழலில் கோப்ரா படத்தில் ஷேன் நிகமிற்கு பதிலாக மற்றொரு மலையாள நடிகர் சர்ஜூனோ காலித் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

Related Stories: