×

கமலை சந்தித்த பிரபல இயக்குனர்

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் , டிக் டிக் டிக் மற்றும் ஒரு கைதியின் டைரி என மறக்க முடியாத படங்களை கமலுக்கு தந்தவர் இயக்குனர் பாரதிராஜா. இருவரும் படத்தில் இணைந்து 35 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் பாரதிராஜா திடீரென்று மகன் மனோஜ் உடன் சென்று கமல்ஹாசனை சந்தித்தார். இதையடுத்து மீண்டும் இருவரும் படத்தில் இணைவார்கள் என்ற கிசுகிசு பரவியது.

ஆனால் பாரதிராஜா தான் நடித்து இயக்கியிருக்கும் மீண்டும் ஒரு மரியாதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கமலை பங்கேற்குமாறு அழைப்பதற்காக சந்தித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் சமீபத்தில் கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அதுகுறித்து பாரதிராஜா அவரிடம் நலம் விசாரித்தாராம்.

Tags : Famous ,Kamal ,
× RELATED தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் வாங்க...