தமன்னாவின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்

நடிகை தமன்னா கடைசியாக விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் புதிய படம் எதுவும் தமன்னா கைவசம் இல்லை. ஒரு இந்தி, 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமன்னா புத்தக பிரியை கிடையாது என்றாலும் சில புத்தகங்களை படித்திருக்கிறார். ஒஷோவின் உண்மையான பெயர் என் புத்தகத்தை படித்தபிறகுதான் தமன்னா ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார்.

அதேபோல் ரோரி ப்ரீட் மற்றும் கிம் பர்னூ எழுதிய ஸ்கின்னி பிட்ச் புத்தகத்தை படித்த பின் அசைவ உணவு சாப்பிடுவதை கைவிட்டு சைவத்துக்கு மாறினார் தமன்னா. இந்த இரண்டு புத்தகங்களும் தன் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக சமீபத்தில் தமன்னாவே தெரிவித்தார்.

Related Stories:

>