ஜெயம் ரவிக்கு திரிஷா மகளா? அக்காவா?

உனக்கும் எனக்கும், பூலோகம், சகல கலா வல்லவன் படங்களில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. உனக்கும் எனக்கும், சகல கலா வல்லவன் படத்தில் இவர்களின் ரொமான்ஸ் பேசப்பட்டது. இந்நிலையில் ஜெயம் ரவியின் அக்காவாக திரிஷா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜோடியாக நடித்தவர்கள் எப்படி தந்தை, மகளாக நடிக்க ஒப்புக் கொண்டார்கள் என்று பலரும் ஆச்சர்யப்படுகின்றனர். கதைப்படி அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் இருவரையும் தந்தை மகளாக  மாற்றியிருக்கிறதாம்.

மணிரத்னம் இயக்கும் படம் ’பொன்னியின் செல்வன்’. இதில் திரிஷா முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்காக பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை வாங்கி படித்தும் வருகிறார். இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார்.  அருண்மொழித்தேவன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். சோழ வரலாறுபடி அருண் மொழித்தேவனின் மூத்த மகள்தான் குந்தவை. இந்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிப்ப தால்தான் ஜெயம் ரவியின் மகளாக நடிப்பதாக தகவல் பரவுகிறது.

இன்னும் சிலர் ராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். கதைப்படி ராஜராஜ சோழனின் அக்காதான் குந்தவை. எனவே ரவியின் அக்காவாகத்தான் திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜீத்துக்கு தங்கையாக லட்சுமி மேனன், சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம்பிரபுவுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>