×

வரலட்சுமியின் ஊக்கத்தை தடுத்தவர்கள்

போடா போடி, தாரை தப்பட்டை, சண்ட கோழி 2, சர்கார் என ஹீரோயின், எதிர்மறை வேடம் என போட்டு தாக்கிய நடிகை வரலட்சுமி சரத்குமார் குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது,’இதுவொரு நீண்ட கடினமான பயணம். நல்ல விஷயங்களை அடைவது சுலபம் அல்ல என்பார்கள். என் விஷயத்தில் அது மிகவும் உண்மை. ஆனால் கண்டிப்பாக கனவுகள் ஒருநாள் நிஜமாகும். எனது சிறந்த திறனில் நான் வேலை செய்திருக்கிறேன். இந்த கட்டத்தை எட்ட நான் பல சவால்களை சந்தித்து உள்ளேன்.

இப்போது நான் 25 படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன் என்பதே பெரிய அளவு கோலாக எனக்கு தெரிகிறது. என்ன நடந்தாலும் என்னுடன் நின்று என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என் பக்கம் நின்று என் ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி. ஏனென்றால் உங்கள் எதிர்மறை எண்ணம் என்னை இன்னும் வலிமை ஆக்கியது. உங்களை தவறென்று நிரூபிக்க இன்னும் பிடிவாதமாக என்னை நிற்க வைத்தது. என்னை ஆதரித்து அன்பு காட்டிய ரசிகர்களுக்கு மிகவும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Varalakshmi ,
× RELATED லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!!