×

சாப்பாடு கதையில் சந்தானம்

சந்தானம், வைபவி சாண்டில்யா நடித்து இருக்கும் படம், சர்வர் சுந்தரம். ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘இதுவரை இப்படியொரு கதையுடன் எந்த படமும் வந்ததில்லை. நான் ஓட்டல் மேனேஜ்மெண்ட் ஸ்டூடண்ட் என்பதால்தான், இந்த கதையை மிக ஆழமாக யோசித்து எழுத முடிந்தது. மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு காற்று, உணவு, நீர் ஆகியவை அவசியம். இதில் சாப்பாட்டை மட்டும் மையப்படுத்தி சந்தானத்திடம் ஒரு கதை சொன்னேன்.

அவருக்கு பிடித்திருந்தது. நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்துக்கும், இப்படத்துக்கும் தலைப்பு தவிர எந்த சம்பந்தமும் இல்லை. நாகேஷ் போன்ற கேரக்டரில் நடிக்க ஒருவர் தேவைப்பட்டபோது, அவரது பேரன் பிஜேஷ் ஞாபகத்துக்கு வந்தார். அவரது நடிப்பில் நாகேஷ் மேனரிசங்கள் தெரிந்தது. வரும் 31ம் தேதி இப்படம் ரிலீசாகிறது’ என்றார்.

Tags : Santhanam ,
× RELATED சாரநாதன் பொறியியல் கல்லூரியில் லக்ஷ்யா பல்சுவை நிகழ்ச்சி