தங்கை வேடத்தில் நடிப்பது ஏன்? ஐஸ்வர்யா ராஜேஷ்

விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா, மடோனா செபாஸ்டியன், சாந்தனு நடிக்கும் படம், வானம்  கொட்டட்டும். தனா இயக்க, பாடகர் சித்ஸ்ரீராம் இசை அமைக்கிறார். மணிரத்னம் தயாரிக்கிறார். இப்படத்தில் நடித்தது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: செக்கச் சிவந்த வானம் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த நான், இப்போது அவரது தயாரிப்பில் நடிக்கிறேன். நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்த நான், இதில் விக்ரம் பிரபு தங்கையாக நடித்துள்ளேன். இன்றைய சூழலில் அண்ணன், தங்கை பாசம் எப்படி இருக்கிறது என்பதை படம் சொல்கிறது.

இதில் சரத்குமார், ராதிகாவின் மகளாக நடித்தபோது பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். காக்கா முட்டையில் சில ஹீரோயின்கள் நடிக்க மறுத்த அம்மா வேடத்தில் நடித்தேன். என் துணிச்சலை பார்த்த சில நடிகைகள், அம்மா வேடத்தில் நடிக்க முன்வந்தனர். சின்ன வயதில் முதிர்ச்சியான கேரக்டர்களில் நடிக்கும்போது, நமக்குள் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும். அதனால்தான் அம்மா வேடத்திலும் நடித்தேன். இப்போது தங்கை மற்றும் ஹீரோயினாக நடித்து வருகிறேன்.

Related Stories:

>