×

பாலா தயாரிப்பில் ஜோசப் ரீமேக்

மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் நடிப்பில் ரிலீசான படம், ஜோசப். இதன் தமிழ் ரீமேக் உரிமையை ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார். இதில் அவரே ஹீரோவாக நடிக்க, எம்.பத்மகுமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக ஆர்.கே.சுரேஷ் தன் உடல் எடையை 73ல் இருந்து 95 கிலோவுக்கு அதிகரித்துள்ளார்.

அவரை தாரை தப்பட்டை என்ற படத்தில் நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலா தயாரிக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. சமீபத்தில் ஷூட்டிங் தொடங்கியது.

Tags : Joseph ,making ,Bala ,
× RELATED கார் மீது லாரி மோதல் சென்னை பெண்...