×

ஆட்டோவில் கடத்திய 82 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை யானைகவுனி பகுதியில் வெளிமாநிலத்திலிருந்து கடத்தி வந்த குட்கா மூட்டைகளை ஆட்டோவில் எடுத்துச் செல்ல முயன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அதில் இருந்த 82 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை யானைகவுனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று காலை வால்டாக்ஸ் சாலை, சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் அலுவலகம் அருகில் கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு நபர் ஆட்டோவில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார். மூட்டைகள் குறித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகமடைந்த போலீசார் மூட்டையை சோதனை செய்தனர். அதில் இருந்த 82 கிலோ குட்கா பாக்கெட் பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா கடத்திச் செல்ல முயன்ற ஆட்டோ டிரைவர் வீரபாண்டி (32) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வீரபாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்….

The post ஆட்டோவில் கடத்திய 82 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Yanikauni ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...