×

பிங்க் ரீமேக்கில் நிவேதா

பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும் நடித்த நிவேதா தாமஸ், தற்போது இந்தி பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். பவன் கல்யாண், அஞ்சலி, அனன்யா நாகல்லா நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக்கான படத்தில் அஜீத், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தனர்.

இந்தி பிங்க் படத்தில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்திருந்தனர். இவ்விரு படங்களையும் பார்த்த நிவேதா தாமஸ், டாப்சி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் பாணியில் நடிக்காமல், ரீமேக் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் வேணு சொல்லிக் கொடுப்பது போல் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்