×

ஹாலிவுட் நடிகை 5-வது திருமணம்

ஒன்று இரண்டு, மூன்றாவது திருமணம்கூட கேள்விபட்டிருக்கிறோம். ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் 5வது திருமணம் செய்திருக்கிறார். தயாரிப்பாளர் ஜோன் பீட்டர் என்பவருடன் கடந்த 35 வருடமாக டேட்டிங் செய்து வந்த பமீலா சில தினங்களுக்கு முன் கலிபோர்னியாவில் மாலிவு நகரில் அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம்பற்றி பமீலா கூறும்போது, ’ஹாலிவுட்டின் கெட்ட பையன் ஜோன் பீட்டர் ஒப்பில்லாதவர். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது.

பரஸ்பர அன்பும், மரியாதையும் பரிமாறிக்கொள்கிறோம். எந்த நிபந்தனையு மின்றி காதலித்தோம். இப்போது எங்களை கடவுள் இணைத்து வைத்துள்ளார்’ என்றார். பமீலாவுக்கு தற்போது 52 வயதாகிறது. ஜோன் பீட்டருக்கு 74 வயதாகிறது என்பது குறிப்பிடத் தக்கது. திருமண தகலை அறிந்த ரசிகர்கள், ‘இவங்களுக்கெல்லாம் வயசு வெறும் நம்பர்தான்’ என கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.

Tags : Hollywood ,actress ,
× RELATED ஹாலிவுட் நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன் திடீர் விருந்து