இயக்குனரிடம் அனுஷ்கா அதிருப்தி

உடல் எடை காரணமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அனுஷ்கா சுமார் ஒன்றரை வருட இடைவெளிக்கு பிறகு நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் உடல் எடையை ஓரளவுக்கு குறைத்தாலும் எதிர்பார்த்தளவுக்கு ஒல்லியான தோற்றத்துக்கு மாறவில்லை. இதையடுத்து டிஜிட்டல் முறையில் அவர் நடித்துள்ள காட்சிகளில் அவரை ஒல்லியாக காட்டுவதற்கான தொழில்நுட்ப பணிகள் நடந்ததாக தெரிகிறது.

நிசப்தம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தபோது அதில் அனுஷ்கா பங்கேற்காமல் வெளிநாடு சென்றார். படம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழு எண்ணி உள்ளனர். இப்படத்தை அனுஷ்காவிடம் காட்டியபோது அவருக்கு எடிட்டிங்கில் அதிருப்தி ஏற்பட்டதாக தெரிகிறது.

மீண்டும் ஒருமுறை எடிட்டிங் செய்து காட்சிகளில் விறுவிறுப்பை கூட்டி காட்டுங்கள் அதன்பிறகு புரமோஷனுக்கு வருகிறேன் என்று இயக்குனரிடம் அவர் கூறியிருக்கிறாராம். இதுகுறித்து பட தரப்பில் கேட்டபோது,’நிசப்தம் படத்தை திட்டமிட்டபடி சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய எண்ணி உள்ளோம். அதற்கான எல்லா வேலைகளும் வேகமாக நடந்துவருகிறது’ என்றனர்.

Related Stories:

>