×

நடிகையை பார்க்க ரோட்டில் படுத்து ரசிகர் அடம்

ஜீவா நடிக்க மிஷ்கின் இயக்கத்தில் உருவான படம் முகமூடி. இதில் ஹீரோயினாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். மும்பையில் வசித்து வரும் பூஜாவை இணைய தளத்தில் ஒரு ரசிகர் தொடர்ந்து பின்பற்றி வந்து அவரை புகழ்ந்து மெசேஜ் வெளியிட்டு வந்தார். அதற்கு பூஜா வரவேற்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென அந்த ரசிகர்பூஜாவை நேரில் சந்திக்க மும்பை புறப்பட்டு சென்று அவரது வீட்டு கதவை தட்டினார்.

ஆனால் அங்கிருந்த செக்யூரிட்டி, அப்பாயின்மென்ட் இல்லாமல் சந்திக்க முடியாது என்று கூறி ரசிகரை விரட்டினார். எப்படியாவது பூஜாவை சந்தித்தே தீருவேன் என்ற முடிவோடு அந்த ரசிகர் 5 நாட்கள் அப்பகுதியில் உள்ள சாலையிலேயே படுத்துக் கிடந்தார். இந்த தகவல் பூஜாவுக்கு தெரியவர ரசிகரை நேரில் அழைத்து சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பை இன்ஸ்டாகி ராமில் பூஜாவே வெளியிட்டிருப்பதுடன், ‘ஒவ்வொரு ரசிகரும் எனக்கு பலம், ஆனால் இதுபோல் என்னை சந்திக்க வரவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Tags : Adam ,road ,actress ,
× RELATED கோடை சீசன் துவங்கும் நிலையில்...