×

அஜீத்துக்கு வில்லனாக பிரசன்னா ஆசை

நடிகர் பிரசன்னா பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் ஒரு மாற்றத்துக்காக அஞ்சாதே படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்தார். அதற்கு வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற கண்டிஷனை தளர்த்திக்கொண்டு வெவ்வேறு கதாபாத்திரங் களில் நடித்தார். இந்நிலையில் வலிமை படத்தில் அஜீத்துக்கு வில்லனாக பிரசன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பிரசன்னா கூறும்போது,’ வலிமை படத்தில் நடிக்க என்னிடம் பேசினார்கள்.  அஜீத்துடன் நடிக்க நானும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எதிர்பாராத வகையில் அமையாமல்போய்விட்டது. ஆனாலும் எதிர் காலத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

Tags : Prasanna ,villain ,Ajith ,
× RELATED கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய...