×

ஊராட்சி தலைவர் வெடிகுண்டு வீசி கொலை

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தாம்பரம் அடுத்து கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (49). இவருக்கு 2 மனைவிகள், முதல் மனைவி ஜோதி மற்றும் ஒரு மகள் வெங்கடேசனை விட்டு பிரிந்து சென்றுவி்ட்டனர். இதனால், வெங்கடேசன், கவிதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு மாடம்பாக்கம் பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகள் 9 பேர் கஞ்சா விற்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது குறித்து வெங்கடேசன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அந்த கும்பலுக்கும், வெங்கடேசனுக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கும்பல் வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்டு அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர். அதில், கையில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த, சம்பவம் நடைபெற்ற சில மாதங்களில் கஞ்சா விற்பனை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட குடும்பத்தை சேர்ந்த இமாம், முகமது அலி ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த, கொலை சம்பவத்திற்கு பின்னர், அந்த குடும்பத்தினர் மாடம்பாக்கம் பகுதியிலிருந்து காலி செய்துவிட்டு, வேறு பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த இரட்டை கொலைக்கு வெங்கடேசன் தான் காரணமாக இருக்கும் என அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகள் வெங்கடேசனை பழிவாங்க வேண்டும் என இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெங்கடேசன் வெற்றிபெற்றார். நேற்று முன்தினம் இரவு மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கார்த்திக் நகர் பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பு பணியை பார்வையிட்டுவிட்டு, பின்னர் அவரது நண்பர்களுடன் ராகவேந்திரா நகருக்கு செல்லும் சந்திப்பில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, 4 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. மிண்டு ஓடிய வெங்கடேசனை பின்தொடர்ந்து துரத்தி வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி, தப்பிச்சென்றது. இதில், ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், குறித்து தகவலறிந்த மணிமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, 3 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடிவந்த நிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் பிடிபட்டுள்ளதாகவும், அவர்கள் கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர்கள் தான் எனவும், இரட்டை கொலை சம்பவத்திற்காக பழிக்கு பலியாக வெங்கடேசனை கொலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மறைவையொட்டி, மாடம்பாக்கம் ஊராட்சி முழுவதும் உள்ள அனைத்து கடைகளும், துக்கம் அனுசரிக்கும் விதமாக மூடப்பட்டது. ஆங்காங்கே சாலைகளின், முக்கிய சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவடைந்து, வெங்கடேசன் வீட்டிற்கு, அவரது உடல் கொண்டுவரப்பட்டதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, திமுக மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன், ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மாடம்பாக்கம் ஊராட்சி பகுதியில், ஊராட்சி மன்ற தலைவரை, மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவதால் அப்பகுதியில் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருந்து வருகிறது.* தொடர் கொலைகள்செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பல ஊராட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். 2012ம் ஆண்டு மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தமன், 2013ம் ஆண்டு சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், 2014ம் ஆண்டு ஊரப்பாக்கம் ஒன்றிய ஊராட்சி தலைவர் பெருமாள், கடந்த செப்டம்பர் மாதம் நடுவீரப்பட்டு ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் சதீஷ் எனத் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஊராட்சி தலைவர் வெடிகுண்டு வீசி கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mambambakkam ,Navaradhakam Muncheri ,Kootuvancheri ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்