×

தீபிகாவுக்கு வலைவிரிக்கும் யோகா சாமியார்

யோகா பயிற்சி அளிக்கும் சாமியார் பாபா ராம்தேவ். அடிக்கடி அரசியல் கருத்துக்களும் கூறி பரபரப்பு ஏற்படுத்துகிறார். தற்போது தீபிகாவுக்கு வலைவிரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த மாதம் டெல்லியில் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில் மாணவர்கள், ஆசிரியர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்ததோடு மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார் நடிகை தீபிகா படுகோனே.

இதையடுத்து தீபிகாவை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். அவர் நடித்து வந்த அரசு விளம்பரம் ஒன்றிலிருந்தும் நீக்கப்பட்டார். தீபிகா நடித்து திரைக்கு வந்த சப்பக் இந்தி படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதற்கும் கலங்காமல் அமைதி காத்த தீபிகாவுக்கு பாலிவுட் நட்சத்திரங்களும், ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் நடிகை தீபிகாவுக்கு வலைவிரித்திருக்கிறார்.

‘தீபிகா படுகோன்  சமூக மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்து எந்தவொரு முக்கிய நிலைப்பாடும் எடுப்பதற்கு முன்பாக என்னிடம் (ராம்தேவ்) ஆலோசனை பெற்றால் அவருக்கு எந்த பிரச்னையும் வராது. அவர் என்னை தனது ஆலோசகராக நியமித்துக்கொள்ள வேண்டும். என்னைப் போன்ற நல்லவர்கள் ஆலோசனையை கேட்டால் தீபிகாவின் எதிர்காலத்துக்கு நல்லது’ என தெரிவித்திருக்கிறார் யோகா சாமியார் ராம்தேவ்.

Tags : Deepika ,yoga maestro ,
× RELATED தீபிகாவை ஒதுக்கிய மக்கள்