×

அரசியல் கதை இயக்கும் நடிகை

அரசியல் கதைகளில் நடிக்க சில நடிகர்களே தயக்கம் காட்டும் நிலையில் பூ பார்வதி அரசியல் கதை இயக்க உள்ளாராம். பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பார்வதிக்கு இயக்குனர் ஆகும் ஆசையும் உள்ளது. சமீபத்தில் அவர் கூறும்போது, ’விரைவில் திரைப்படம் இயக்க உள்ளேன்.

அநேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் அதற்கான பணிகளை தொடங்கிவிடுவேன். அரசியல் பின்னணியில் ஒரு கதை, த்ரில்லர் பாணியில் ஒரு கதை என 2 கதைகள் தயாரித்திருக்கிறேன். எந்த படம் முதலில் இயக்குவது என்பதுபற்றி சீக்கிரம் தெரிவிப்பேன்’ என்றார்.

Tags : Actress ,
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!