×

பங்கேற்கும் 32 அணிகள்: கத்தார் நவ.20 – டிச.18

உலக கோப்பை கால்பந்து தொடரின் ஆட்டங்கள் மொத்தம் 8 அரங்கங்களில் நடைபெற உள்ளன. அவற்றின் விவரங்கள்……* அல் பையத் அரங்கம்தொடக்கவிழாவும், முதல் ஆட்டமும் இந்த அரங்கில்தான் நடைபெற உள்ளன. மொத்த இருக்கைகள் 60,000. கூரை திறந்து, மூடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. கத்தார் நாடோடி மக்கள் பயன்படுத்திய கூடாரத்தின் வடிவில் இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.* லுசைல் அரங்கம்மொத்தம் 80 ஆயிரம் இருக்கைகளை கொண்ட கத்தாரின் மிகப்பெரிய அரங்கமான இதில்தான் பைனல் நடைபெற இருக்கிறது. தோஹாவின் மையப் பகுதியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அரபு நாடுகளில் பண்டைய காலத்தில் கைவினைக் கலைஞர்கள் உருவாக்கிய கோப்பை வடிவில் இந்த அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.* அகமது பின் அலி அரங்கம்தோஹாவின் மேற்கு மையப் பகுதியான அல் ராயனில் உள்ள இந்த அரங்கில் 40 ஆயிரம் ரசிகர்கள் கால்பந்து விளையாட்டை பார்த்து ரசிக்கலாம். பாலைவனத்தை ஒட்டிய பகுதி. இங்கு ஏற்கனவே இருந்த அரங்கத்தை இடித்து விட்டுதான் புதிய அரங்கத்தை கட்டியுள்ளனர். புதிய அரங்கத்தின் 80% கட்டுமான பொருட்கள் பழைய அரங்கில் இருந்து எடுக்கப்பட்டவை.* அல் ஜனாப் அரங்கம்அல் வாக்ரா பகுதியில் அமைந்துள்ள இந்த அரங்கில் 40 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. கடற்கரையை ஒட்டியுள்ள இந்த அரங்கம் கத்தாரின் பாரம்பரிய தோவ் படகுகளை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உலக கோப்பைக்கு பிறகு மற்ற விளையாட்டுகளுக்கும் பயன்படும் வகையில் இந்த அரங்கம் மாற்றப்பட்ட உள்ளது.* அல் துமாமா அரங்கம்போட்டி தொடங்கிய மறுநாளே அதாவது நவ.21ம்  தேதி செனகல் – நெதர்லாந்து இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இது அரேபிய சிறுவர்கள் அணியும் வெள்ளை நிற சல்லடை குல்லா போன்று இந்த அரங்கம் வடிவமைத்து இருக்கின்றனர்.* எஜுகேஷன் சிட்டி அரங்கம்மொத்தம் 40 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காணும் வசதியுள்ள இந்த அரங்கம்  கத்தாரின் கல்வி நகரமான அல் ரய்யானில் கட்டப்பட்டுள்ளது. இஸ்லாமிய கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் உலகத்தரத்திலான வசதிகளுடன் இந்த அரங்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.* கலீஃபா சர்வதேச அரங்கம்இந்த அரங்கிலும் 40ஆயிரம் ரசிகர்களுக்கு  தான் இடம். இது புதுப்பிக்கப்பட்ட அரங்கம். இந்த அரங்கம் 1976 முதல் பயன்பாட்டில் இருக்கிறது. கத்தாரின் முக்கிய கால்பந்து, தடகளப் போட்டிகள் இங்குதான் நடந்துள்ளன. அரங்கம் முழுதும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்டது.* அரங்கம் 974ராஸ் அபு அபவுத் என்ற இடத்தில் உள்ள இந்த அரங்கத்தின் கொள்ளவும் 40 ஆயிரம் இருக்கைகள்தான். கடற்கரைக்கு மிக அருகில் உள்ள இந்த அரங்கம், உலக கோப்பைக்கு முன்பே மிகவும் பிரபலமான அரங்கமாகி விட்டது. காரணம் இந்த புதிய அரங்கம் முழுவதும் கப்பலில் பொருட்களை கொண்டுச் செல்ல பயன்படும் இரும்பு கன்டெய்னர் எஃகினால் கட்டப்பட்டுள்ளது. 974 என்ற எண் கத்தாருக்கான சர்வதேச தொலைத் தொடர்பு குறியீடு எண்.ஃபிபா உலக கோப்பை கால்பந்துலீக் சுற்று அட்டவணைதேதி    பிரிவு    அணிகள்    தொடக்கம்நவ. 20    ஏ    கத்தார்-ஈக்வடார்    இரவு 9.30நவ. 21    பி    இங்கிலாந்து-ஈரான்    மாலை 6.30நவ. 21    ஏ    செனகல்-நெதர்லாந்து    இரவு 9.30நவ. 21    பி    அமெரிக்கா-வேல்ஸ்    இரவு 12.30நவ. 22    சி    அர்ஜென்டினா-சவுதி அரேபியா    பிற்பகல் 3.30நவ. 22    டி    டென்மார்க்-துனிசியா    மாலை 6.30நவ. 22    சி    மெக்சிகோ-போலந்து    இரவு 9.30நவ. 22    டி    பிரான்ஸ்-ஆஸ்திரேலியா    இரவு 12.30நவ. 23    எப்    மொராக்கோ-குரோஷியா    பிற்பகல் 3.30நவ. 23    இ    ஜெர்மனி-ஜப்பான்    மாலை 6.30நவ. 23    இ    ஸ்பெயின்-கோஸ்டா ரிகா    இரவு 9.30நவ. 23    எப்    பெல்ஜியம்-கனடா    இரவு 12.30நவ. 24    ஜி    சுவிட்சர்லாந்து-கேமரூன்    பிற்பகல் 3.30நவ. 24    எச்    உருகுவே-தென் கொரியா    மாலை 6.30நவ. 24    எச்    போர்ச்சுகல்-கானா    இரவு 9.30நவ. 24    ஜி    பிரேசியல்-செர்பியா    இரவு 12.30நவ. 25    பி    வேல்ஸ்-ஈரான்    பிற்பகல் 3.30நவ. 25    ஏ    கத்தார்-செனகல்    மாலை 6.30நவ. 25    ஏ    நெதர்லாந்து-ஈக்வடார்    இரவு 9.30நவ. 25    பி    இங்கிலாந்து-அமெரிக்கா    இரவு 12.30நவ. 26    டி    துனிசியா-ஆஸ்திரேலியா    பிற்பகல் 3.30நவ. 26    சி    போலந்து-சவுதி அரேபியா    மாலை 6.30நவ. 26    டி    பிரான்ஸ்-டென்மார்க்    இரவு 9.30நவ. 26    சி    அர்ஜென்டினா-மெக்சிகோ    இரவு 12.30நவ. 27    இ    ஜப்பான்-கோஸ்டா ரிகா    பிற்பகல் 3.30நவ. 27    எப்    பெல்ஜியம்-மொராக்கோ    மாலை 6.30நவ. 27    எப்    குரோஷியா-கனடா    இரவு 9.30நவ. 27    இ    ஸ்பெயின்-ஜெர்மனி    இரவு 12.30நவ. 28    ஜி    கேமரூன்-செர்பியா    பிற்பகல் 3.30நவ. 28    எச்    தென் கொரியா-கானா    மாலை 6.30நவ. 28    ஜி    பிரேசில்-சுவிட்சர்லாந்து    இரவு 9.30நவ. 28    எச்    போர்ச்சுகல்-உருகுவே    இரவு 12.30நவ. 29    ஏ    நெதர்லாந்து-கத்தார்    இரவு 8.30நவ. 29    ஏ    ஈக்வடார்-செனகல்    இரவு 8.30நவ. 29    பி    வேல்ஸ்-இங்கிலாந்து    இரவு 12.30நவ. 29    பி    ஈரான்-அமெரிக்கா    இரவு 12.30நவ. 30    டி    ஆஸ்திரேலியா-டென்மார்க்    இரவு 8.30நவ. 30    டி    துனிசியா-பிரான்ஸ்    இரவு 8.30நவ. 30    சி    போலந்து-அர்ஜென்டினா    இரவு 12.30நவ. 30    சி    சவுதி அரேபியா-மெக்சிகோ    இரவு 12.30டிச. 1    எப்    குரோஷியா-பெல்ஜியம்    இரவு 8.30டிச. 1    எப்    கனடா-மொராக்கோ    இரவு 8.30டிச. 1    இ    ஜப்பான்-ஸ்பெயின்    இரவு 12.30டிச. 1    இ    கோஸ்டா ரிகா-ஜெர்மனி    இரவு 12.30டிச. 2    எச்    கானா-உருகுவே    இரவு 8.30டிச. 2    எச்    தென் கொரியா-போர்ச்சுகல்    இரவு 8.30டிச. 2    ஜி    செர்பியா-சுவிட்சர்லாந்து    இரவு 12.30டிச. 2    ஜி    கேமரூன்  பிரேசில்    இரவு 12.30(டிச. 3 முதல் நாக்-அவுட் சுற்று தொடக்கம்)…

The post பங்கேற்கும் 32 அணிகள்: கத்தார் நவ.20 – டிச.18 appeared first on Dinakaran.

Tags : Qatar ,World Cup football series ,Al Bayat Stadium ,Dinakaran ,
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...