×

படம் இயக்குவேன்: வெற்றி

8 தோட்டாக்கள், ஜீவி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ள வெற்றி, தற்போது 5 புதுப்படங்களில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கேர் ஆஃப் கச்சிராயபாளையம் என்ற தெலுங்கு படம், தமிழில் கேர் ஆஃப் காதல் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஹேமம் பார் இயக்குகிறார். இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்கிற்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடி.

இதில் என் பெயர், தாடி. வனம் என்ற படத்தில், கலைக்கல்லூரியில் சிற்பக்கலை பயிலும் மாணவனாக நடிக்கிறேன். இது பூர்வஜென்ம கதை. தடம் ஸ்ம்ருதி வெங்கட் ஹீரோயின். மூணாறு காடுகளில் படப்பிடிப்பு நடந்தது. அடுத்து, குரு ராமானுஜம் இயக்கத்தில் நடிக்கிறேன். டைரக்‌ஷன் செய்வதிலும் ஆர்வம் இருக்கிறது என்றார்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்