மலையாள சானியா கோலிவுட் என்ட்ரி

‘இறலி’ என்ற பெயரில் பதிய படம் உருவாகிறது. ஜெய் விஜயகுமார் இயக்குகிறார். வெண்ணிஸ் கண்ணா ஹீரோ. சானியா ஐய்யப்பன் ஹீரோயின்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது,’ இறலி என்ற சொல் திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டது. விளைவு என்பது இதன் பொருள். ஒரு பொருளை தவறான வழியில் அடைய ஆசைப்பட்டால் அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பது படத்தின் கரு.

இதில் வெண்ணிஸ் கண்ணா ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை தயாரிக்கிறார். மோகன்லால் நடித்த லுசிஃபர் படத்தில் மஞ்சு வாரியர் மகளாக நடித்த சானியா ஐயப்பன் ஹீரோயினாக நடிக்கிறார். பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்ஓபி. ராஜா இசை அமைக்கிறார்’ என்றார்.

ஹீரோ வெண்ணிஸ் கண்ணா கூறும்போது,’ரசாயன உரங்களை போட்டு மண் மலடாகிப்போனதால் விளைச்சல் இல்லாமல் போய்விடுகிறது. தானே கனியும் பழத்தை ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கின்றனர். அந்த பழங்கள் விஷமாகிவிடுகிறது. அதனை உண்பதால் எவ்வளவு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த மோசடியை அம்பலப்படுத்தும் விழிப்புணர்வு படமாக இது இருக்கும்’ என்றார்.

Related Stories: