×

75 வயது நடிகருக்கு டும் டும்

பாலிவுட், கோலிவுட் மட்டுமல்ல வங்காள மொழி திரைப்பட உலகிலும் லிவிங் டு கெதர் கலாச்சாரம் பரவியிருக்கிறது. வங்காள திரைப்பட நடிகர் டிபான்கர் டே. 75 வயது ஆகிறது. இவரும் டோலன் ராய் என்ற 49 வயது நடிகையும் கடந்த சில ஆண்டுகளாக லிவிங் டு கெதர் பாணியில் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி இரண்டு நாட்களுக்கு முன் இருவரும் திடீர் திருமணம் செய்துகொண்டனர். வயது வெறும் நம்பர்தான் என்பதை இருவரும் நிரூபித்திருப்பதாக திரையுலகினர் அவர்களை வாழ்த்தினார்கள். திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் வங்காள நடிகர்கள் கலந்துகொண்டனர். இருவரும் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள்.

Tags : actor ,
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி