×

கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்கி சடலத்தை சுமந்துசென்ற மக்கள்: சிறுபாலம் அமைக்க கோரிக்கை

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன்(40), விவசாயி. இவரது மனைவி சந்திரா(35). இவர்களுக்கு யுவராஜ்(14) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பரசுராமன் நேற்று இறந்தார்.  இதையடுத்து உறவினர்கள் பரசுராமன் சடலத்தை கமண்டல நதிக்கரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் கொண்டு சென்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக கமண்டல நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் செண்பகத்தோப்பு அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் அதிகளவு வெள்ளம் செல்கிறது. இந்த பகுதியில் சிறுபாலம் இல்லாததால் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் சடலத்தை தோளில் சுமந்து வெள்ளத்தில் இறங்கி ஆற்றை கடந்து சென்று அடக்கம் செய்தனர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆற்றை கடக்க முடியாததால் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘ஆற்றில் வெள்ளம் வரும்போது ஆபத்தான முறையில் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்து வருகிறோம். இதனால் உறவினர்கள் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். ராமநாதபுரம், கொல்லைமேடு, மல்லிகாபுரம், கமண்டலாபுரம், தஞ்சான்பாறை, இருளம்பாறை, நடுவூர்   உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களும், மாணவர்களும் இந்த வழியாகதான் ேவலூர், ஆரணி போன்ற இடங்களுக்கம், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர். ஆற்றில் வெள்ளம் வரும்ேபாது அனைத்து தரப்பு மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளகின்றனர். இந்த பகுதியில் சிறுபாலம் அமைக்கக்கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சிறுபாலம் அமைக்க மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….

The post கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்கி சடலத்தை சுமந்துசென்ற மக்கள்: சிறுபாலம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Parasuraman ,Ramanathapuram Kollainimedu Village ,Thiruvannamalai District Kannamangalam ,Sangangalam ,
× RELATED அண்ணன் தலைமீது கல்லை போட்டு கொன்ற...