×

கடலில் விழப்போன காமெடி நடிகரை காப்பாற்றிய நடிகை

‘எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்’ என்ற  புதிய பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டார். இப்படத்தில் விஜி சந்திரசேகர் பிரதான பாத்திரம் ஏற்றிருக்கிறார். கிரண் ஹீரோ. மேகனா ஏலன், நியா கிருஷ்ணா ஹீரோயின்கள். சாப்ளின்பாலு, தென்னவன், என்ஜாய் ராஜா, டிஎன்எஸ் சின்னவர் ஆகியோரும் நடிக்கின்றனர். சிவசங்கரன் ஒளிப்பதிவு. தேவ் ஓங்கார் இசை, தயாரிப்பு அபிநயா ராஜசிங்.

இரட்டையர்கள் கே.எஸ்.சரவணன், அபுபக்கர் இயக்கி உள்ளனர். படம் பற்றி இயக்குனர்கள் கூறியது: இப்படம் கடல் வாழ் மக்களின் கதையை பேசுகிறது. விஜி சந்திரசேகர் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்துக்கொடுத்தார். கடலுக்கு நடுவில் சென்று அவரை படகை ஓட்டும்படி கூறியபோது எனக்கு நீச்சல் தெரியாது என்றார்.

ஆனாலும் துணிச்சலாக படகு ஓட்ட சம்மதம் தெரிவித்தார். அவர் கடலில் விழுந்துவிடாமல் கவனமாக பார்த்துக்கொள்ளும்படி உடன் நடித்த சாப்ளின் பாலுவிடம் கூறினேன். ஒரு கட்டத்தில் சாப்ளின் பாலு கடலில் விழப்போனார். அவரை விஜி தான் தாவிப்பிடித்து காப்பாற்றினார். இவ்வாறு இயக்குனர்கள் கூறினர்.

Tags : actress ,comedy actor ,sea ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...