×

நான் கன்னி அல்ல; நடிகை பரபரப்பு

இனிது இனிது, மவுனம் பேசியதே படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி படங்களில் நடித்திருப்பவர் நேஹா பென்ட்சே. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஷர்துல் பயாஸ் என்ற தொழில் அதிபரை மணந்தார். ஷர்துல் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறார்.

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆன ஒருவரை நேஹா திருமணம் செய்துகொண்டதுபற்றி நெட்டிஸன்கள் கிண்டல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்டு வந்தனர். அதை கண்டுகொள்ளாமல் இருந்தவர் தற்போது பதில் அளித்திருக்கிறார்.

நேஹா கூறும்போது,’இரண்டுமுறை திருமணம் ஆன ஒருவரை மணந்துகொள்வது பெரிய விஷயமில்லை. நானே விர்ஜின் இல்லை (கன்னி தன்மை கொண்டவர் அல்ல). அவர் ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் ஆனவராக இருந்தாலும் அவரை எப்படி பார்த்துக்கொள்வது என்பது எனக்கு தெரியும். ஷர்துல் மிகவும் நேர்மையானவர். கடந்த கால வாழ்க்கைபற்றி என்னிடம் எதையும் அவர் மறைக்கவில்லை’ என்றார்.

Tags : virgin ,actress ,
× RELATED கன்னி