×

இன்று முதல் டி20 ஆட்டம்: உலக கோப்பை தோல்விக்கு பிறகு நியூசி-இந்தியா பலப்பரீட்சை

வெலிங்டன்: ஆஸியில் நடந்த டி20 உலக கோப்பை பரபரப்புகள் மெல்ல அடங்கும் சூழலில் மீண்டும் சர்வதே கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. ஆஸி-இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் நேற்று  தொடங்கிய நிலையில்,  நியூசி-இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக நியூசிலாந்து சென்ற இந்திய அணி அங்கு தலா 3 ஆட்டங்களை கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 தொடர் இன்று வெலிங்டன்னில் நடக்கிறது. இந்த 2 நாடுகளும் உலக கோப்பை லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி  தங்கள் பிரிவுகளில் முதல் இடங்களை பிடித்தன. ஆனால் அரையிறுதியில் தோற்று வெளியேறின. அந்த ஒரு தோல்வியால் விமர்சனங்களை சந்தித்து வரும் இந்த அணிகளுக்கும் வெற்றி கட்டாயம் என்ற சூழலில் இன்று களம் காணுகின்றன. உலக கோப்பையில் விளையாடிய கேப்டன்  ரோகித், கோஹ்லி, ராகுல், அஷ்வின், தினேஷ், ஷமி,  ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் காணும் எல்லோரும் சர்வதேச ஆட்டங்களில் ஆடிய அனுபவம் உள்ளவர்கள். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி அணியிலும் சர்வதேச ஆட்டங்களில் கலக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சொந்த ஊரில் ஆடுவது அவர்களுக்கு கூடுதல் பலம். ஆனால்  டி20 போட்டிகளில் உலகின் நெம்பர் ஒன் அணியான இந்தியாவை எதிர்கொள்ள உள்ளனர். காரணம் கடந்த கால வரலாறுகள் இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது. அந்த வரலாறு தொடருமா, மாறுமா என்பது இனி தெரியும்.அணி விவரம்இந்தியா: ஹர்திக்(கேப்டன்), ரிஷப்(து.கேப்டன்/விக்கெட் கீப்பர்), வாஷிங்டன், ஸ்ரேயாஸ், உம்ரன், புவனேஸ்வர், குல்தீப், சாஹல், இஷான், அர்ஷ்தீப், ஹூடா, சிராஜ், சஞ்சு(விக்கெட் கீப்பர்), ஹர்ஷல், சூரியகுமார், ஷூப்மன்.நியூசிலாந்து: வில்லியம்சன்(கேப்டன்), ஃபின் ஆலன், பிரேஸ்வெல், கான்வே(விக்கெட் கீப்பர்), ஃபெர்கூசன், ஆடம், டாரியல், நீஷம்,  பிலிப்ஸ்(விக்கெட் கீப்பர்), சான்ட்னர், ஈஷ் சோதி, சவுத்தீ, டிக்னெர்நேருக்கு நேராக….இந்த 2 அணிகளும்  இதுவரை 20 சர்வதேச டி20 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் இந்தியா 11 ஆட்டங்களிலும், நியூசி 9 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. அதில் நியூசிலாந்தில் நடந்த 10ஆட்டங்களில் இந்தியா 6-4 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.தொடரும் தொடர்கள்இந்தியாவும், நியூசிலாந்தும் 2008-09 முதல் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. இதுவரை 7 தொடர்களில் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 4 தொடர்களிலும்,  நியூசி 3தொடர்களிலும் வென்றுள்ளன. இந்தியாவில் 2021 அக்டோபர், நவம்பரில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அதற்கு முன்பு 2020 ஜனவரி, பிப்ரவரியில் நியூசிலாந்தில் விளையாடிய இந்தியா 5ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையும் 5-0 என்ற கணக்கில் வசப்படுத்தி அசத்தியுள்ளது….

The post இன்று முதல் டி20 ஆட்டம்: உலக கோப்பை தோல்விக்கு பிறகு நியூசி-இந்தியா பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : T20 game ,Newsey ,India ,Palaperitus ,World Cup ,Wellington ,T20 World Cup ,Aussie ,Balaperieche ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்