×

மெட்டா இந்தியா புதிய தலைவர் சந்தியா தேவநாதன்

புதுடெல்லி: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்திய தலைவராக அஜித் மோகன் இருந்தார். 2 வாரங்களுக்கு முன் பதவியை ராஜினாமா செய்த அவர்,  போட்டி நிறுவனமான ஸ்நாப்பில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக, சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. தற்போது,  மெட்டாவின் இயக்குனரும், பேஸ்புக் இந்தியாவின் கூட்டு நிறுவனத்தின் தலைவருமான மணீஷ் சோப்ரா, தற்காலிகமாக தலைவர் பதவியை வகித்து வருகிறார். சந்தியா தனது புதிய பதவியை  அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி  ஏற்கிறார். ஆந்திராவை சேர்ந்த இவர், இம்மாநில பல்கலைக் கழகத்தில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர். பின்னர், டெல்லி பல்கலைக் கழகத்தில் எம்பிஏ படித்தார். பின்னர், சிட்டி வங்கி,  ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிகளில் பணியாற்றினார், பேஸ்புக்கில் கடந்த 2016ல் சேர்ந்தார். சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் தனது நிறுவனத்தை மிகவும் சிறப்பாக வளர்த்ததற்கு பரிசாக, மெட்டா இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்….

The post மெட்டா இந்தியா புதிய தலைவர் சந்தியா தேவநாதன் appeared first on Dinakaran.

Tags : Chandya Devanathan ,Meta India ,New Delhi ,Facebook ,Meta ,Sandya Devanathan ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...