×

ஒரே நாளில் டபுள்; கலக்கும் சந்தானம்

முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சந்தானம் திடீரென்று இனிமே ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஹீரோவாக மாறினார். இதற்காக நடனம், ஸ்டண்ட், கச்சிதமான தோற்றம் என தன்னை தயார்படுத்திக் கொண்டதுடன் பிறரை கலாய்த்து நடிக்கும் காமெடி நடிப்பையும் கைவிடாததால் ஸ்டெடியாக நிற்கிறார்.

காமெடியனாக நடித்தபோது அவர் நடிப்பில் 5 படங்கள் கூட ஒரே நேரத்தில் வெளியாகி உள்ளது. ஹீரோவான பிறகு வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படம் வெளியிடுகிறார்.

இம்முறை சற்று வித்தியாசமாக சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய் ஆனந்த் இயக்கத்தில் ‘டகால்டி’, அதேபோல் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படமும் இம்மாதம் 31ம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
× RELATED அக்கரன் விமர்சனம்