×

மாதவனுடன் மீண்டும் ஜோடி

விக்ரம் வேதா படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து இருந்தவர், ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது நம்பி - தி ராக்கெட்ரி எபெக்ட் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் மாதவன். இதில் சிம்ரன் ஹீரோயின். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை தழுவி இப்படத்தை மாதவன் உருவாக்குகிறார்.

அடுத்து, மலையாளத்தில் ஹிட்டான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்கிறார். திலீப்குமார் இயக்குகிறார். இதற்கு மாறா என்று பெயர். இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மற்றொரு ஜோடியாக, தமிழில் நெடுஞ்சாலை, அதே கண்கள் உள்பட நிறைய படங்களில் நடித்துள்ள ஷிவதா நடிக்கிறார்.

Tags : Madhavan ,
× RELATED காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீடு புகுந்து ரகளை: வாலிபர் கைது