×

கர்ணன் தலைப்பு சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை

பரியேறும்  பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார், தனுஷ்.  இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இப்படத்துக்கு கர்ணன்  என்ற தலைப்பு சூட்டப்படுவதாக தெரிகிறது. படத்தை தயாரிக்கும் கலைப்புலி  எஸ்.தாணு, தனது டிவிட்டரில் இதை சூசகமாக தெரிவித்திருந்தார்.

சிவாஜி சமூக நல பேரவையினர் தாணுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சிவாஜி நடித்த புராண காவியமான கர்ணன் தலைப்பை நேரடியாக பயன்படுத்த வேண்டாம். அதனுடன் வேறு  வார்த்தைகள் சேருங்கள். கர்ணன் என்ற டைட்டில் சிவாஜி படத்துக்கு மட்டுமே இருக்கட்டும்’ என்று கூறியுள்ளனர்.

Tags : fans ,Shivaji ,Karna ,
× RELATED ம.பி.யில் நள்ளிரவில் காவல்நிலையத்தில்...