×

அம்மு அபிராமி படத்துக்கு பழங்குடியினர் எழுதிய பாடல்

அசுரன் படத்தில் இளவயது தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அம்மு அபிராமி அடுத்து அடவி என்ற படத்தில் நடிக்கிறார். ஆழ்வார், திருடா திருடி, கிங் பட ஒளிப்பதிவாளர் ரமேஷ்.ஜி, இப்படத்தை இயக்குகிறார். கே.சாம்பசிவம் தயாரிக்கிறார். படம் பற்றி அவர்கள் கூறியது: அடர்ந்த காட்டுபகுதிக்கு அடவி என்று பெயர். காடுகளை அழிப்பது உலகம் முழுவதும் தொடர்ந்தால் மேகக் கூட்டங்களை பிற நாடுகள் தங்கள் பக்கம் ஈர்த்து அண்டை நாட்டுக்கு மழை பொழிவு இல்லாத நிலையை ஏற்படுத்தும் நிலை உருவாகும்.

காடுகளை அழிக்க எண்ணும் பெரிய நிறுவனம் ஒன்று அப்பகுதியை விட்டு செல்ல மறுக்கும் பழங்குடியினரை என்ன கதிக்குள்ளாக்குகின்றனர் என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கோத்தகிரி அடுத்துள்ள காட்டு பகுதியில் நடந்த படப்பிடிப்பில் படுகா இனமக்களும் நடித்துள்ளதுடன் இரண்டு பாடல்கள் எழுதி பாடியிருக்கின்றனர்.

சரத்ஜடா இசை அமைக்கிறார். வினோத் கிஷன், அம்மு அபிராமி ஆகியோருடன் ராஜபாண்டியன், விஷ்ணு பிரியா, ஆர்.என்.ஆர்.மனோகர், முத்துராமன், ரமேஷ், கே.சாம்சிவம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் வெனிசுலா நாட்டு திரைப்பட விழாவில் பங்கேற்று சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த தயாரிப்பு உள்ளிட்ட 4 விருதுகளை தட்டி வந்துள்ளது. இம்மாதம் படம் திரைக்கு வருகிறது.

Tags : Ammu Abirami ,
× RELATED அம்மு அபிராமி நடிக்கும் பேட்டரி