×

முதன் முறையாக வீட்டில் இசை அமைத்த இசைஞானி

இசைஞானி இளையராஜா 30 ஆண்டுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இசை அமைத்து வந்தார். பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களும், காலத்தால் அழிக்க முடியாத பாடல்களும் தந்திருக்கிறார். இந்நிலையில் அந்த ஸ்டுடியோவிலிருந்து வெளியேறும்படி நிர்வாகம் கேட்டுள்ளது. இதனால் பிரச்னை எழுந்தது.

இந்நிலையில் இளையராஜா புதிய படமொன்றுக்கு முதன்முறையாக தனது வீட்டில் பின்னணி இசை அமைத்திருக்கிறார். விஜய் ஆண்டனி நடிக்கும் படம் தமிழரசன். ரம்யா நம்பீஸன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கான பின்னணி இசையை இளையராஜா தனது வீட்டில் நடத்தியிருக்கிறார். இதற்காக இசை கலைஞர்களை நேரடியாக தனது வீட்டுக்கு வரவழைத்து இந்த நிகழ்வை நடத்தி காட்டியிருக்கிறார்.

Tags : musician ,home ,
× RELATED ஆபத்தாகும் சுகப்பிரசவம்… தப்பிக்கவும், தற்காக்கவும் என்ன வழி?